search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான தேங்காய் பால் வெஜ் புலாவ்
    X

    சூப்பரான தேங்காய் பால் வெஜ் புலாவ்

    பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதியம் சாப்பிட இந்த தேங்காய் பால் வெஜ் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய்ப்பால் - 3 1/2 கப்,
    பச்சரிசி - 1கப்,
    பூண்டு - 10 பல்,
    கேரட், பீன்ஸ், கோஸ், போன்ற நறுக்கிய காய்கள் - சிறிதளவு,
    பச்சை பட்டாணி - 1/2 கப்,
    பச்சைமிளகாய் - 4,
    சீரகப்பொடி - 2 டீஸ்பூன்,
    நறுக்கிய புதினா, கொத்தமல்லிதழை - தலா 1/4 கப்,
    எலுமிச்சை பழம் - 1,
    நெய், உப்பு - தேவைக்கு ஏற்ப.

    தாளிக்க :

    பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா 2



    செய்முறை :

    பச்சரிசியை நன்றாக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.

    ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் நெய்விட்டு பச்சரிசியை போட்டு சிவக்க வறுத்து குக்கரில் போட்டுத் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி மூடி வைக்கவும். அடுப்பில் வைக்கவேண்டாம்.

    நறுக்கிய காய்கறிகளையும், பட்டணியையும் சிறிது நீரும், உப்பும், சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு பின் அதனை ஊறும் அரிசியில் போடவும்.

    வாணலியில் நெய்விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து கீறிய பச்சை மிளகாய் மெலிதாக நறுக்கிய பூண்டு பல், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி குக்கரில் அரிசி, காய்களுடன் போட்டு அடுப்பில் வைக்கவும்.

    உப்பு போட்டுக் கொதித்ததும் மூடி வெயிட் போடவும். அடுப்பைக் குறைத்து வைத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைக்கவும். விசில் வரணுமென்று அவசியமில்லை.

    பிரஷர் தணிந்ததும் திறந்து சீரகப்பொடி, நெய், எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பில் வைத்துக் குறைந்த தணலில் வைத்துக் கிளறி இறக்கவும்.

    விரும்பினால் முந்திரிபருப்பு நெய்யில் வறுத்துப் போட்டுக் கிளறிப் பரிமாறவும்.

    புதினா துவையல், தயிர்ப் பச்சடி தொட்டுக்கொள்ளலாம்.

    சூப்பரான தேங்காய் பால் வெஜ் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×