search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மட்டன் முட்டை சாப்ஸ்
    X

    சூப்பரான மட்டன் முட்டை சாப்ஸ்

    பிரியாணி, புலாவ், சாம்பார் சாதம், ரசம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான காமினேஷன் இந்த மட்டன் முட்டை சாப்ஸ். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 500 கிராம்
    முட்டை - 4
    மிளகு - 1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    கசகசா - ½ ஸ்பூன்
    மிளகு தூள் - 2 ஸ்பூன்
    எண்ணெய் - 100 கிராம்
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க வேண்டிய பொருட்கள் :

    பூண்டு - 6 பல்
    இஞ்சி - சிறிதளவு
    பட்டை - 1
    கிராம்பு - 1
    ஏலக்காய் - 1
    மிளகாய் - 12
    தேங்காய் - 2 சில்
    மஞ்சள் தூள் - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சாப்ஸ் போல் வெட்டிக்வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து தனியே வைக்கவும்.

    மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருள்களை போட்டு நன்றாக அரைக்கவும்.

    அரைத்த மசாலாவை மட்டனை போட்டு நன்றாக பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு குக்கரில் மட்டனுடன், தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    குக்கரில் பிரஷர் இறங்கியதும் சிறிதளவு நீர் இருக்கும் அதை அப்படியே அடுப்பில் வைத்து கிளறி தண்ணீர் முழுவதும் வற்றும் வரை விடவும்.

    மற்றொரு வாணலியில் பொறிக்கும் அளவிற்க்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வேக வைத்த கறியை முட்டையில் நனைத்து எண்ணெயில் போடவும். உடனுக்குடன் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சூப்பரான மட்டன் முட்டை சாப்ஸ் சாப்பிட தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×