search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ்: கோதுமை கார மினி தட்டை
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ்: கோதுமை கார மினி தட்டை

    கோதுமை மாவில் செய்யும் இந்த கார மினி தட்டை ஸ்நாக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இன்று இந்த தட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகுப்பொடி - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    நெய் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.



    செய்முறை :

    பாசிப்பருப்பை மலர வேகவைக்கவும் (குழையக் கூடாது).

    கோதுமை மாவை லேசாக வறுத்துக்கொண்டு, அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, மிளகுப்பொடி, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், நெய் சேர்த்துப் சீடை மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சீடை போல் சிறிதாக உருட்டி, கட்டை விரலால் மெலிதாக அழுத்தி தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    கோதுமை கார மினி தட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×