search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆரோக்கியமான நொறுக்குத் தீனி கேழ்வரகு தட்டுவடை
    X

    ஆரோக்கியமான நொறுக்குத் தீனி கேழ்வரகு தட்டுவடை

    இந்த கேழ்வரகு தட்டுவடை ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், அனைவரும் சாப்பிடலாம். இதனை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    அரிசி மாவு - 3 டீஸ்பூன்,
    வெங்காயம், பச்சைமிளகாய் - 2,
    பூண்டு - 4,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - சுவைக்கு ஏற்ப.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கப் ராகி மாவில் 3 டீஸ்பூன் அரிசி மாவைக் கலந்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றைத் தூவி, அளவான நீர் மற்றும் உப்பு கலந்து பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவில் சிறிது உருண்டை எடுத்து பிளாஸ்டிக் கவரில் மேல் வைத்து தட்டைகளாக தட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டி வைத்த தட்டைகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    ஆரோக்கியமான கேழ்வரகு தட்டுவடை ரெடி.

    பலன்கள்: ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், அனைவரும் சாப்பிடலாம். கேழ்வரகு தோசை, கஞ்சி சாப்பிடாதவர்களும் இந்த வடையைச் சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×