search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோதுமை ஓமப்பொடி செய்வது எப்படி?
    X

    கோதுமை ஓமப்பொடி செய்வது எப்படி?

    குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி என்றால் மிகவும் பிடிக்கும். நொறுக்கு தீனியை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுக்கலாம். கோதுமை ஓமப்பொடி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமைமாவு - கால் கப்,
    கடலைமாவு - கால் கப்,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    வெண்ணெய் - 2 ஸ்பூன்
    ஓமம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கோதுமை மாவை ஒரு காய்ந்த துணியில் சுற்றி அரை மணி நேரம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வெந்த மாவை போட்டு இத்துடன் ஓமம், சீரகம் இவை இரண்டையும் தூள் செய்து போடவும்.

    அடுத்து அதில் கடலைமாவு சேர்க்கவும்.

    பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    பிசைந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து மொறு மொறு என்று பொரிந்ததும் எடுக்கவும்.

    சுவைமிகு ஓமப்பொடி ரெடி.

    மாவுடன் சிறிது வெண்ணெயைக் கலந்தால் ஓமப்பொடி மிகவும் மிருதுவாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×