search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர டிபன் சில்லி சப்பாத்தி
    X

    மாலை நேர டிபன் சில்லி சப்பாத்தி

    காலையில் செய்த சப்பாத்தி மீந்து விட்டால் மாலையில் அதை வைத்து சூப்பரான சில்லி சப்பாத்தி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 2,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 1,
    சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    சிவப்பு ஃபுட் கலர் - 1 துளி,
    கொத்தமல்லித்தழை- கால் கட்டு,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கேற்ப.

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் சப்பாத்தியை சின்னத் துண்டுகளாகப் பிய்த்து போட்டு வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் சேர்க்கவும்.

    பிறகு அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான மாலை டிபன் சில்லி சப்பாத்தி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×