search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தோசைக்கு அருமையான கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு
    X

    தோசைக்கு அருமையான கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு

    சாதம், தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்த அருமையாக இருக்கும் இந்த கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 100 கிராம்,
    அப்பளப்பூ - 15,
    தக்காளி - 1
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
    எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

    அரைத்துக்கொள்ள:

    தேங்காய் துருவல் - கால் கப்,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    கசகசா - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று.

    தாளிக்க:

    கடுகு, கறிவேப்பிலை,
    உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்.



    செய்முறை :  

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    தக்காளி, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடலைப்பருப்பை சுண்டலுக்கு வேகவைப்பது போல் வேகவைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரை கப் நீர் விட்டு... மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு கொதிக்கவிடவும்.

    இரண்டு கொதி வந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை போட்டு, மேலும் ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.

    மசாலா பச்சை வாசனை போய் அனைத்தும் சேர்ந்து வெந்ததும் இறக்கவும்.

    தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

    கடைசியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அப்பளத்தை போட்டு பொரித்து எடுத்து பருப்பு கூட்டில் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×