search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டிலேயே செய்யலாம் மைதா பட்டர் பிஸ்கட்
    X

    வீட்டிலேயே செய்யலாம் மைதா பட்டர் பிஸ்கட்

    வீட்டில் மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் இந்த முறையில் பிஸ்கட் செய்யலாம். இன்று மைதா பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்,
    வெண்ணெய் - 100 கிராம்,
    பொடித்த சர்க்கரை - 75 கிராம்,
    உப்பு, பேக்கிங் பவுடர் - தலா கால் டீஸ்பூன்.



    செய்முறை:

    * மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பலமுறை சலித்துக் கொள்ளவும்.

    * வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து மிருதுவாகும் வரை குழைக்கவும்.

    * சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் இதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து பிசையவும்.

    * இந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தட்டவும். இதனை பாட்டில் மூடி அல்லது பிஸ்கட் அச்சினால் கால் அங்குல பருமன் அளவுக்கு வட்டமாக வெட்டவும். வெட்டிய துண்டுகளை 'போர்க்’ (முள்கரண்டி) கொண்டு லேசாக குத்திவிடவும்.

    * ஒரு தட்டில் நெய் தடவி, மேலே மைதா மாவு தூவி, செய்து வைத்த துண்டுகளை இடைவெளிவிட்டு அடுக்கவும். அடிகனமான வாணலியில் மணலை சூடுபடுத்தி, அதன் மேல் தட்டை வைத்து, இட்லி பானை மூடியால் அழுத்தி மூடவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிடத்துக்குப் பிறகு, வாசனை வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு பிஸ்கட்டுகளை வெளியே எடுக்கவும்.

    * சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா பட்டர் பிஸ்கட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×