search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
    X

    சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

    சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - 2 டம்ளர் (அரை கிலோ)
    பெரியவெங்காயம் - 2 + ஒன்று
    தக்காளி - 3
    பட்டை - ஒன்று
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 2
    அன்னாசிப்பூ - 2
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - பூண்டு விழுது - இரண்டரை டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    புதினா - ஒரு கைப்பிடி
    தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் - அரை கப்
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - கால் கப்
    நெய் - கால் கப்
    முந்திரி - 10
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    பால் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    * சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

    * பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்.

    * ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பிரவுன் நிறத்துக்கு வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

    * ஒரு பவுலில் சிக்கன், கால் கப் தயிர், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.



    * இத்துடன் பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள் தூள், சிக்கன் சேர்த்து வதக்கவும்.

    * இத்துடன் கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குறைந்த தீயில் சிக்கனை வேகவிடவும்.  தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் மற்றும் சிக்கனில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. வெந்ததும் தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைக்கவும்.

    * அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரை எடுத்து சுடவைத்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில்  வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கி, அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

    * பிறகு சுடுநீரை ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பாகம் வெந்ததும் இறக்கிவிடவும்.

    * மீண்டும் அடுப்பில் மற்றொரு வாயகன்ற பெரிய பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி சிக்கன் மசாலாவை சேர்த்துப் பரவலாக்கவும். அதன் மீது வெந்த நெய் சோறு, பிறகு வறுத்த பிரவுன் நிற பெரியவெங்காயம் சிறிதளவு தூவவும்.

    * இப்படி சிக்கன் கலவை, நெய்சோறு, வறுத்த வெங்காயக் கலவை என்கிற விகிதத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் பரப்பவும். குங்குமப்பூ ஊறிய பாலை அப்படியே பிரியாணி முழுக்க ஊற்றி, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி தயார்.

    * சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×