search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜிடபிள் கட்லெட்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜிடபிள் கட்லெட்

    ரைஸ் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்காமல் அதை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    சமைக்கப்பட்ட சாதம் - 1 கப்
    உருளைக்கிழங்கு - 1
    காய்கறிகள் (பச்சை பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாள், சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கேரட்) - 1கப் (நறுக்கியது)
    பெரிய வெங்காயம் - 1
    இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - கொஞ்சம்
    சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
    மக்காச் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    * வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாதத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் காய்கறிகள், மசித்த சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இஞ்சி, மிளகாய் தூள், கொத்தமல்லி இலை, உப்பு, மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மக்காச் சோள மாவு, கடலை மாவு என அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்போது தான் அதன் பதம் தெரியும்.

    * பிசைந்து வைத்த கலவையில் சிறிது எடுத்து உருட்டி தட்டையாக அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் தட்டி வைக்க வேண்டும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்க வேண்டும். கட்லெட் நன்றாக பொரிய இருபக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

    * பொரித்த கட்லெட்டை சாஸ் அல்லது கொத்தமல்லி மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறவும்.

    * சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×