search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சைடிஷ் ஆந்திரா குண்டூர் சிக்கன்
    X

    சூப்பரான சைடிஷ் ஆந்திரா குண்டூர் சிக்கன்

    ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று குண்டூர் சிக்கன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    காய்ந்த சிவப்பு மிளகாய் - 6 (காரம் அவரவர் விருப்பம்)
    தனியா - 3 தேக்கரண்டி
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    வெந்தயம் - கால் தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை)
    வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 150 கிராம்
    புளிக்காத தயிர் - 2 மேசைக்கரண்டி
    கொத்தமல்லி இலை - சிறிது
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    * வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும்.

    * கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விடவும். அடிக்கடி திறந்து பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.

    * சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    * சூப்பரான குண்டூர் சிக்கன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×