search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஷாஹி காளான் பிரியாணி செய்வது எப்படி?
    X

    ஷாஹி காளான் பிரியாணி செய்வது எப்படி?

    வீட்டில் காளான் இருந்தால், அருமையான ஷாஹி காளான் பிரியாணியை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். இன்று ஷாஹி காளான் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சாதத்திற்கு...

    பாசுமதி அரிசி - 2 கப்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கிராம்பு - 4
    கருப்பு ஏலக்காய் - 1
    மிளகு - 4
    உப்பு - தேவையான அளவு

    காளான் மசாலாவிற்கு...

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கிராம்பு - 2
    மிளகு - 4
    கருப்பு ஏலக்காய் - 2
    பட்டை - 1 இன்ச்
    வெங்காயம் - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    காளான் - 200 கிராம்
    கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

    அலங்கரிக்க...


    வெங்காயம் - 1/2 கப்
    முந்திரி - 5-6
    குங்குமப்பூ - 1 சிட்டிகை (1 டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைத்தது)
    கொத்தமல்லி - 1 டீஸ்பூன்



    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாதத்திற்கு...

    * முதலில் அரிசியை நன்கு கழுவி, நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, ஏலக்காய் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு அரிசியை அத்துடன் சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து, அரிசியானது முக்கால் பாகம் வெந்ததும், அதனை இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    காளான் மசாலாவிற்கு...


    * காளானை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, மிளகு, பட்டை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    * வெங்காயமானது பொன்னிறமானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பின்பு மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் காளானை சேர்த்து, மூடி வைத்து, காளானை வேக வைக்க வேண்டும். காளானானது நன்கு வெந்து, தண்ணரானது வற்றியதும், அதில் கொத்தமல்லியை தூவி இறக்க வேண்டும்.



    அலங்கரிக்க...

    * வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * முந்திரியையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிரியாணி...

    * ஒரு அகன்ற வாணலியில் மூன்றில் ஒரு பங்கு சாதத்தைப் போட்டு, அதன் மேல் காளான் மசாலா சிறிதளவு பரப்பி, மீண்டும் பாதி சாதத்தைப் போட்டு, மறுபடியும் மீதமுள்ள அனைத்து காளான் மசாலாவையும் பரப்பி, இறுதியில் மீதமிருக்கும் சாதத்தைப் பரப்பிக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அதனை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் அனைத்து பொருட்களும் ஒன்று சேரும் வரை, மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.

    * இறுதியில் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரியை தூவி, குங்குமப்பூ பாலை ஊற்றி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான ஷாஹி காளான் பிரியாணி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×