search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர சிற்றுண்டி வெஜிடபிள் கொத்து பரோட்டா
    X

    மாலை நேர சிற்றுண்டி வெஜிடபிள் கொத்து பரோட்டா

    காலையில் செய்த பரோட்டா மீந்து விட்டால் மாலையில் சிற்றுண்டியாக காய்கறிகள் சேர்த்து சூப்பரான வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பரோட்டாக்கள் - 5
    வெங்காயம் - 2
    நாட்டுத் தக்காளி (பெரியது) - 1
    குடமிளகாய் (பெரியது) - 1
    கேரட் - 1
    பட்டாணி - 1 கப்
    பூண்டு - 2 பல்லு
    எலுமிச்சை சாறு-  2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    பட்டை - 4
    சோம்பு - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 4
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.

    * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டை தட்டிக்கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.

    * இதனுடன் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கினதும் தக்காளி, குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை.

    * அடுத்து அதில் கேரட், வேக வைத்த பச்சைப் பட்டாணியையும் சேர்த்து உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.

    * காய்கறிகள் வெந்தவுடன் காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் பரோட்டா துண்டுகளை போட்டு காய்கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

    * எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது கொத்தமல்லித்தழை தூவி நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான வெஜிடபிள் கொத்து பரோட்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×