search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சைடிஷ் சேனைக்கிழங்கு மசாலா வறுவல்
    X

    சூப்பரான சைடிஷ் சேனைக்கிழங்கு மசாலா வறுவல்

    சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள கருணைக்கிழங்கு (அ) சேனைக்கிழங்கு மசாலா வறுவல் சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேனைக்கிழங்கு - 200 கிராம்
    கடலைப்பருப்பு - கால் கோப்பை
    கொத்தமல்லி விதை (தனியா) - 4 தேக்கரண்டி
    மிளகாய் வற்றல் - 10
    சின்ன வெங்காயம் - 10
    பூண்டு - 4 பற்கள்
    சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 150 மிலி.
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * சேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

    * கழுவிய கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.

    * கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சோம்பு ஆகியவற்றை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்; தூள் தூளாக இல்லாமல் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * பின் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    * இந்த விழுதை, வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த கிழங்குகளை ஒவ்வென்றாக அடுக்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சூப்பரான சேனைக்கிழங்கு மசாலா வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×