search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் சோயா - உருளைக்கிழங்கு கட்லெட்
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் சோயா - உருளைக்கிழங்கு கட்லெட்

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சாப்பிட சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா - உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோயா - 1/2 கப்,
    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1,
    கேரட் - 1,
    குடை மிளகாய் - 1,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.



    செய்முறை :

    * சோயாவை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    * கேரட், வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுத்து ஊறவைத்த சோயாவை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் காய்கறிகளை போட்டு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் பொடித்த சோயா சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்து வைத்த சோயா மாவை வடை போல் தட்டி தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

    * சோயா - உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

    * இதனை தக்காளி சாஸு டன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×