search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி - சின்ன வெங்காய தொக்கு
    X

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி - சின்ன வெங்காய தொக்கு

    சப்பாத்தி, பூரி, நாண், தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த தக்காளி - சின்ன வெங்காய தொக்கு. இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பழுத்த தக்காளி - அரை கிலோ,
    சின்ன வெங்காயம் - 150 கிராம்,
    மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
    தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
    பூண்டு - 8 பல்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    கடுகு - அரை டீஸ்பூன்,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - கால் கப்.



    செய்முறை :

    * தக்காளியை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு தாளித்த பின் பூண்டு சேர்த்து நன்றாகப் பொரிந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காய விழுதை மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

    * அடுத்து அதில் தக்காளி சாறை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து தொக்கு நன்றாக சுருங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான தக்காளி - சின்ன வெங்காய தொக்கு ரெடி.

    * சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×