search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஸ்பைஸி காளான் பிரியாணி செய்வது எப்படி
    X

    ஸ்பைஸி காளான் பிரியாணி செய்வது எப்படி

    அசைவத்திற்கு இணையான மாற்று காளான். இன்று காளான் வைத்து ஸ்பைஸியான பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    நறுக்கிய பட்டன் காளான் - ஒரு கப்,
    தக்காளி, வெங்காயம் - தலா 2
    ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - நெய் கலவை, உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * இஞ்சி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.

    * வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    * தக்காளியைச் சுடுநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெய் - நெய் கலவையைச் சேர்த்து, சூடானதும் பட்டன் காளான் சேர்த்து... இஞ்சி, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து அதில் தக்காளிச் சாறு ஊற்றி பச்சை வாசனை போன வதக்கவும்.

    * அடுத்து தேவையான நீர் சேர்த்துக் கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை `வெயிட்’ போட்டு மூடி, 2 விசில் வந்த உடன் நிறுத்தவும்.

    * ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறி சூடாகப் பரிமாறவும்.

    * சூப்பரான ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×