search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் சன்னா மசாலா
    X

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் சன்னா மசாலா

    கொண்டைக் கடலை புரதச் சத்து நிறைந்தது. சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் சன்னா மசாலா. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சன்னா - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    தயிர் - கால் கப்
    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 3
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தனியாக அரைக்க :

    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 2



    செய்முறை :

    * சன்னாவை 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

    * இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சிப் பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தூள் சேர்த்து அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் தயிரை ஊற்றி கிளறவும்.

    * அடுத்து உருளைக்கிழங்கு, சன்னாவை சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும்.

    * சூப்பரான சன்னா மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×