search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி
    X

    ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி

    மிஸ்ஸி ரொட்டி ராஜஸ்தானில் மிகவும் பிரபலம். இந்த ரொட்டியை செய்வது மிகவும் சுலபமானது. இந்த ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்
    பாசிப்பருப்பு - ஒரு கப்
    உலர்ந்த கஸ்தூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * பாசிப்பருப்பை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும்.

    * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், உப்பு, வேகவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், உலர்ந்த கஸ்தூரி மேத்தி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி பதத்துக்கு பிசைந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    * பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய ரொட்டிகளாக தேய்த்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும், உருட்டிய ரொட்டிகளைச் சேர்த்து இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

    * சூப்பரான ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×