search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு
    X

    காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

    சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சை மிளகாய் - 15
    குட மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 1
    உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
    புளி - சிறிய உருண்டை
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :



    * பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.

    * பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    * மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

    * காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

    * இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×