search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் நட்ஸ் குக்கீஸ்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் நட்ஸ் குக்கீஸ்

    குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் குக்கீஸ் செய்யலாம். இன்று நட்ஸ் வைத்து குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 500 கிராம்,
    டால்டா அல்லது வெண்ணெய் - 250 கிராம்,
    சர்க்கரை பவுடர் - 250 கிராம்,
    ஏலக்காய் - 2,
    உப்பு - 1 சிட்டிகை,
    பொடித்த நட்ஸ் - 1/2 கப்,
    ஆப்ப சோடா  - 1/4 டீஸ்பூன்.



    செய்முறை :

    * ஆப்ப சோடா, மைதாவை தனித்தனியா நன்றாக சலித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதனுடன் டால்டா அல்லது வெண்ணெய் சேர்த்து நன்றாக தேய்த்து அடிக்கவும். மிருதுவாக வரும் வரை கைவிடாமல் அடிக்கவும்.

    * இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக சலித்த ஆப்ப சோடா, மைதா, ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.

    * உதிரும் பக்குவத்தில் உப்பு சேர்க்கவும்.

    * மீண்டும் நன்றாக கலந்து, பாதியளவு நட்ஸை சிறிது மைதா மாவில் கலந்து இந்தக் கலவையுடன் சேர்த்து, தேவையான வடிவில் உருட்டவும்.

    * உருட்டியவற்றை குக்கீஸ் கப்புகளில் நிரப்பி அதற்கு மேல் மீதமுள்ள பொடித்த நட்ஸை தூவி அவனில் (150 முதல் 175°C) 15 முதல் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

    * டிரேயில் இடம் விட்டு அடுக்கியும் பேக் செய்யலாம். இது சூடாக இருக்கும் போது மெது மெதுவென்று இருக்கும். ஆற ஆற, மொறுமொறுவென ஆகிவிடும்.

    * சூப்பரான நட்ஸ் குக்கீஸ் ரெடி.

    * காற்று புகாத டப்பாவில் வைத்து 1 வாரம் வரை சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×