search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி

    டிரை ஃப்ரூட்ஸ், பிரட் வைத்து செய்யும் இந்த பர்ஃபி சூப்பராக இருக்கும். இப்போது இந்த சூப்பரான பிரட் பர்ஃபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஃப்ரெஷ் பிரட் தூள் - 2 கப்,
    துருவிய தேங்காய் - 1/2 கப்,
    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    சர்க்கரை - 1/2 கப்,
    நெய் - 4 டீஸ்பூன்,
    ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
    வெள்ளித் தாள் - சில,
    கன்டென்ஸ்டு மில்க்  - 1/2 கப்,
    உடைத்த நட்ஸ், விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் - 3/4 கப்,
    திராட்சை, பொடித்த செர்ரி பழங்கள் - தேவைக்கு,
    பால் - 1 கப்.



    செய்முறை :

    * வெறும் கடாயில் நட்ஸ், உலர்ந்த பழங்கள், விதைகள் அனைத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்துக் கொள்ளலாம். 

    * பாலில் பிரட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

    * ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் மிதமான தீயில் நெய்யை விட்டு சூடாக்கி பிரட் விழுதை சேர்த்து கிளறவும்.

    * நன்கு சுருண்டு வரும் போது தேவையானால் சிறிது நெய் சேர்க்கலாம். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கும்.

    * அடுத்து அதில் சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறவும்.

    * துருவிய தேங்காய், ரோஸ் எசென்ஸ் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.

    * பர்ஃபி கலவை திக்கான பதம் வந்தவுடன் அதில் உலர்ந்த பழங்கள், நட்ஸ், விதைகள் சேர்க்கவும். கொஞ்சம் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும்.

    * கடைசியாக ஏலக்காய் தூளை தூவி நன்றாக கலந்து இறக்கவும்.

    * பர்ஃபி கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விடவும்.

    * ஆறியதும் வெள்ளி சரிகையை அதில் இட்டு, மீதி உள்ள நட்ஸை தூவி துண்டுகள் போட்டு பரிமாறவும்.

    * பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி ரெடி.

    * இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×