search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் ஸ்பிரிங் ரோல்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் ஸ்பிரிங் ரோல்

    குழந்தைகளுக்கு பிடித்தமான இறாலுடன் காய்கறிகளை சேர்த்து ஸ்பிரிங் ரோல் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்பிரிங் ரோல் ஷீட் - 15
    இறால் - 15 ( பெரியது)
    கேரட் - 1
    சாலட் வெள்ளரி - 1
    முட்டைகோஸ் - 1/4 கப்
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    பூண்டு - 4 பல்
    இஞ்சி - 1 சிறுதுண்டு,
    பச்சை மிளகாய் - 1,
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி (கறுப்புமிளகு தூளும் சேர்க்கலாம்)
    சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு



    ஓரங்களை ஒட்ட:

    மைதா - 1 மேசைக்கரண்டி
    தண்ணீர் - சிறிதளவு

    செய்முறை :

    * வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மைதாவை சிறிதளவு தண்ணீர் பசை போல் கலந்து வைக்கவும்.

    * இறாலை நன்றாக சுத்தம் செய்து உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பிசறி தனியாக வைக்கவும்.

    * கேரட், சாலட் வெள்ளரியை 2 இன்ச் நீளத்தில் மெல்லிய குச்சிகளாக வெட்டி கொள்ளவும்.



    * வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

    * அடுத்து சோயா சாஸ் சேர்த்துக் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

    * ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் சிறிதளவு வைத்து அதன் மீது ஒரு இறால், சிறிதளவு கேரட், வெள்ளரி வைத்து சுருட்டவும்.

    * ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள ஸ்ப்ரிங் ரோல்களை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * இறால் ஸ்பிரிங் ரோல் ரெடி.

    * ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை ஃப்ரீசரில் வைத்து இருந்து எடுத்து ஈரமான டவலில் சுற்றி வைக்கவும். இல்லையென்றால் ஷீட் காய்ந்து சுருட்ட வராது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×