search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான கேழ்வரகு அல்வா
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான கேழ்வரகு அல்வா

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 1 1/2 கப்
    பால் கோவா அல்லது பால் பவுடர் - 1 கப்
    தண்ணீர் - 2 கப்
    நெய் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    முந்திரிப்பருப்பு - தேவைக்கு



    செய்முறை :

    * வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு சூடானதும் அதில் கேழ்வரகு மாவைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாசனை வரும் வரை வறுக்கவும்.

    * பின்னர் அதில் வெல்லப்பாகை விட்டு நன்றாக கைவிடாமல் கிளறவும். இடைஇடையே சிறிது சிறிதாக நெய்யை ஊற்ற வேண்டும்.

    * அல்வா சற்று கெட்டியாக ஆரம்பித்து ஓரங்களில் நெய் பிரிய ஆரம்பித்தவுடன் பால் கோவாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    * பின்னர் அதில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கலந்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.

    * விருப்பப்பட்டால் நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போட்டும் பரிமாறலாம்.

    * சூப்பரான கேழ்வரகு அல்வா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×