search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி
    X

    வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி

    பன்னீரை பலரும் மசாலா, கிரேவி என்று செய்து சுவைத்திருப்போம். ஆனால் இன்று பன்னீர் பஹடி செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்தலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 500 கிராம்
    குடமிளகாய் - 1
    வெங்காயம் - 1
    புதினா - 1/4 கப்
    கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 6
    பூண்டு - 4 பற்கள்
    தயிர் - கால் கப்
    உப்பு - தேவையான அளவு
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
    தந்தூரி மசாலா - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    * பன்னீர், வெங்காயம், குடமிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, மிளகாய், பூண்டு, மல்லித் தூள், சீரகப் பொடி, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, அதில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மீதமுள்ள பாதியில் சோள மாவு, தந்தூரி மசாலா, சாட் மசாலா, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    * கலந்த மசாலாவில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம் சேர்த்து பிரட்டி, க்ரில் கம்பியில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம், என்று வரிசைப்படுத்தி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து க்ரில் கம்பியை நீட்டி பன்னீரை பொன்னிறமாக க்ரில் செய்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

    * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் நிறம் மாறும் வரை வதக்கி, பின் அதில் 2 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் சாட் மசாலா மற்றும் மல்லித் தூள சேர்த்து 5 நிமிடம் இறக்கவும்.

    * இந்த மசாலாவை பன்னீரின் மேல் ஊற்றினால், பன்னீர் பஹடி ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×