search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எளிய முறையில் செய்யலாம் முட்டை குழம்பு
    X

    எளிய முறையில் செய்யலாம் முட்டை குழம்பு

    அவித்த முட்டையோடு, குழம்பு கொதிக்கும் போது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி வேக வைப்பது இன்னும் சுவையைக்கூட்டும். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5 (4+1)
    வெங்காயம் - 1
    பூண்டு - 7 பல்
    தக்காளி - 1
    உப்பு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சாம்பார் மிளகாய்த்தூள் - 2 1/2 தேக்கரண்டி, அல்லது
    மிளகாய்த்தூள் - 1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும்.
    புளிச்சாறு  - 2 மேஜைக்கரண்டி

    செய்முறை :

    * 4 முட்டையை அவித்து ஒட்டை உடைத்து விட்டு மேல் சிறிய கீறல்கள் போடவும். இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டையின் சுவையைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.

    * வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், வெந்தயம் போட்டு தாளித்த பின் வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.

    * புளிக்கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

    * நன்கு கொதிக்கும் போது தீயை சிம்மில் வைத்து 1 முட்டையை உடைத்து நிதானமாக குழம்பின் நடுவில் ஊற்றவும்.

    * இரண்டு நிமிடம் இளந்தீயில் கொதித்தபின் தீயை கூட்டவும்.

    * நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * சுவையான முட்டை குழம்பு தயார்.

    குறிப்பு :

    முட்டையை உடைத்து ஊற்றும் போது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும். இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும்.

    ஊற்றிய முட்டை வேகும் வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×