search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா
    X

    சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா

    செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழிக்கறி - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2
    இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 18
    மல்லி (தனியா ) - 3 டீஸ்பூன்
    சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்

    தாளிக்க :

    பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஆற வைத்து ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

    * நாட்டுக்கோழிக்கறியை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அலசி குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கிவையுங்கள். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

    * சிறிதளவு சிறிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்த பின் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிவக்க வதக்குங்கள்.

    * பிறகு அதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்குங்கள்.

    * அடுத்து அதில் வறுத்து அரைத்த மசாலா, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த கறியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்குங்கள்.

    * பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.

    * மசாலா கெட்டியானவுடன் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

    * சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×