search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி
    X

    மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி

    இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான மீல் மேக்கர் (சோயா மீட்) குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    மீல் மேக்கர் - 1 கப்
    பட்டாணி - அரை கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    சீரக தூள்  - 1/2 ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
    தேங்காய் பால் - 1/2 கப்
    உப்பு - 3/4 ஸ்பூன்  
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
     
    * மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
     
    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
     
    * அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    * அடுத்து அதில் மீல் மேக்கர், தேங்காய் பால், வேக வைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×