search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்

    சில்லி பேபிகார்ன் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 200 கிராம்,
    சோயா சாஸ் - 2 ஸ்பூன்,
    கார்ன் ஃப்ளோர் - 2 ஸ்பூன்,
    மைதா - 2 ஸ்பூன்,
    தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்,
    சில்லி சாஸ் - 1 ஸ்பூன்,
    வெங்காயம் - 2,
    ப.மிளகாய் - 4,
    இஞ்சி - சிறிய துண்டு,
    மிளகுத்தூள் - ½ ஸ்பூன்,
    அஜினோமோட்டோ - ½ ஸ்பூன், (தேவையானால்),
    எண்ணெய் தேவைக்கேற்ப.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    * இஞ்சிய துருவிக் கொள்ளவும்.

    * பேபி கார்ன் துண்டுகளில் சிறிது உப்பு, மைதா மற்றும் கார்ன் - ப்ளோரை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    * நன்றாக ஊறிய பேபி கார்னை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

    * மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, இஞ்சி துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * லேசாக வதங்கிய பின் மிளகுத்தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து வதக்கி பின் அதில் பொரித்து வைத்த பேபிகார்னை சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாற வேண்டும்.

    * சுவையான சில்லி பேபிகார்ன் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×