search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மிளகு முட்டை வறுவல்
    X

    சூப்பரான மிளகு முட்டை வறுவல்

    சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் முட்டையுடன் மிளகு சேர்த்து செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கு. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - 1(பெரியது )
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - 1 கொத்து
    மிளகுதூள் - 1 ஸ்பூன்
    சோம்புத்தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முதலில் முட்டையை  வேகவைத்து, ஆறியதும் தோல் உரித்து, இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சிறிது வதங்கியதும் மிளகுத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் முட்டையும் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.

    * இதுபோல இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.

    * தயில் சாதம், சாம்பார் சாதத்திற்கு சிறந்த சைட் டிஷ் இது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×