search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் ஸ்லைஸ் - 10
    காலிபிளவர் -  250 கிராம்
    குட மிளகாய் -  2
    வெண்ணெய் - 2 பெரிய ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3
    டொமேட்டோ கெட்ச் அப் - தேவைக்கு
    கரம் மசாலா - இரண்டு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு,
    மிளகாய் தூள் - 1 சிறிய ஸ்பூன்
    பிரெட் ஒட்டுவதற்கான சோள பிளவர் மாவு, தேவையான அளவு தண்ணீர்
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை :

    * முதலில் காலிபிளவர், குடமிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காலிபிளவரை சூடான உப்பு கலந்த நீரில் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.

    * சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டு போல் செய்து வைக்கவும்.

    * பிரட்டின் ஓரங்களை வெட்டி வைக்கவும்.

    * கடாயில் வெண்ணெய் போட்டு அதில் ப.மிளகாய் போட்டு தாளித்த பின் காலிபிளவர், குடமிளகாய் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் டொமேட்டோ கெட்ச் அப், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    * பிரெட்டை அழகிய ரோலாக உருட்டி அதனுள் கோபி கலவையை வைக்கவும். பின் ஒரப்பகுதியை சோள மாவுகொண்டு ஒட்டி பத்துமுதல் பதினைந்து நிமிடம் காயவைக்கவும். விரும்பினால் பிரிஜ்ஜிலும் வைக்கலாம்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒவ்வெரு ரோலாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * இவ்வாறு பொரித்து எடுத்ததை குழந்தைகள் விரும்பும்படி டிசைன் டிசைனாக வெட்டி, டொமேட்டோ கெட்ச் அப்போ, அல்லது கார சட்னியுடனோ பறிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×