search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான அரிசிப் பாயாசம் செய்வது எப்படி
    X

    சூப்பரான அரிசிப் பாயாசம் செய்வது எப்படி

    ஜவ்வரிசி, சேமியா பாயாசம் செய்து அலுத்து போனவர்கள் அரிசிப்பாயாசம் செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உடைத்த பச்சரிசி - 100 கிராம்
    வெல்லம் - 200 கிராம்
    தேங்காய்ப்பால் - 1 கப்
    நெய் - சிறிது
    முந்திரி, கிஸ்மிஸ் - சிறிது
    ஏலக்காய் தூள்  - சிறிது

    செய்முறை :

    * உடைத்த பச்சரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வெந்த அரிசிவுடன் வெல்லம் போட்டு அது கரைந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    * அடுத்து அதில் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கடைசியில் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

    * சூப்பரான அரிசிப்பாயாசம் ரெடி.

    * தேங்காய் பாலுக்குப் பதில் துருவிய தேங்காயையும் போடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×