search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலைநேர ஸ்நாக்ஸ் ரிப்பன் பக்கோடா
    X

    மாலைநேர ஸ்நாக்ஸ் ரிப்பன் பக்கோடா

    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    புழுங்கலரிசி - ஒரு கப், 
    கடலை மாவு - ஒரு கப், 
    நெய் - 2 (அ) 3 டீஸ்பூன், 
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், 
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், 
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை : 

    * புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிது கெட்டியாக அரைத்து எடுக்கவும். 

    * அதனுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய் ஆகியவற்றை சேர்த்துப் பிசையவும். 

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    * சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி.

    * சூடு ஆறியவுடன் இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×