search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காடை வறுவல்
    X

    காடை வறுவல்

    சுவையான காடை வறுவல்
    தேவையான பொருட்கள்

    காடை (தொடை பகுதி) - 4
    பெரிய வெங்காயம் - 2
    தயிர் - அரை கப்
    கொத்தமல்லி - 2 கொத்து
    புதினா - ஒரு கொத்து
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - ஒரு மேசைக்கரண்டி
    இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
    தனியா தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    செய்முறை

    * பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    * புதினா மற்றும் கொத்தமல்லித் தழை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.

    * காடையின் தொடை பகுதியை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.

    * இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்த பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிரட்டவும். பச்சை வாசனை போகும் வரை பிரட்டவும்.

    * 3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத் தூள், உப்பு மற்றும் தயிரை ஊற்றி நன்கு பிரட்டவும். அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.

    * பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை 12 நிமிடம் வேக விடவும். இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 12 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

    * மேலே எலுமிச்சை பழம் சாறு பிழிந்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

    * சுவையான காடை வறுவல் ரெடி.
    Next Story
    ×