search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முளைக்கட்டிய கேழ்வரகு பாதாம் கஞ்சி
    X

    முளைக்கட்டிய கேழ்வரகு பாதாம் கஞ்சி

    சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக சாப்பிட சத்தானது இந்த கேழ்வரகு பாதாம் கஞ்சி. இன்று இந்த கஞ்சி செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    கேழ்வரகு - 1 கப், 
    பாதாம் பருப்பு - 50 கிராம், 
    தண்ணீர் - 4 கப், 
    மோர் - 2 கப், 
    சின்ன வெங்காயம் - 10, 
    சீரகம் - ஒரு டீஸ்பூன், 
    கறிவேப்பிலை - தேவையான அளவு, 
    பச்சை மிளகாய் - 3, 
    கடுகு - ஒரு டீஸ்பூன், 
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், 
    உப்பு, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.




    செய்முறை : 

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும். 

    முளை கட்டிய கேழ்வரகை கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்க்கவும். 

    இந்த கேழ்வரகு கலவையை அடுப்பில் வைத்து கைவிடால் கிளறி கொண்டே இருக்கவும். 

    அடுத்து அதில் பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும். 

    நன்றாக கொதித்து கேழ்வரகு வெந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கேழ்வரகில் கொட்டவும்.

    அடுத்து அதில் மோர், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும். 

    உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு பாதாம் கஞ்சி ரெடி. 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×