search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி
    X

    குழந்தைகளுக்கு சத்தான கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி

    கேழ்வரகு, கொள்ளு மாவில் கால்சியம் நிறைந்திருப்பதால், குழந்தைகளுக்கு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த சப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    கேழ்வரகு மாவு - 200 கிராம், 
    கொள்ளு மாவு - 200 கிராம், 
    பீட்ரூட் - 150 கிராம், 
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை : 

    பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில்ர கேழ்வரகு, கொள்ளு மாவுடன் உப்பு, துருவிய பீட்ரூட் போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் சுற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    அருமையான ராகி, கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி ரெடி.

    இதற்கு தக்காளி சட்னி அல்லது குருமா சுவை கூட்டும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×