search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான கேரட் கட்லெட்
    X

    குழந்தைகளுக்கு சத்தான கேரட் கட்லெட்

    குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட்டை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    கேரட் - 100 கிராம், 
    வெங்காயம் - 2, 
    இஞ்சி - சிறிய துண்டு, 
    பச்சை மிளகாய் - 3, 
    புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, 
    ரஸ்க் தூள் - கால் கப், 
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், 
    [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், 
    கடலைமாவு - கால் கப், 
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 



    செய்முறை : 

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    கடலைமாவை தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 

    கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கிய பின்னர் புதினா, கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கவும். 

    அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

    அடுத்து துருவிய கேரட்டை சேர்க்கவும். 

    கேரட் வதங்கியதும் உப்பு, [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, கடைசியாக கரைத்து வைத்துள்ள கடலைமாவை ஊற்றி நன்றாக கிளறவும். மாவு வெந்து ஒட்டாமல் வந்ததும், ரஸ்க் தூளை சேர்த்து இறக்கவும். இந்தக் கலவை கெட்டியாக இருக்கும். 

    இந்த கலவையை விரும்பிய வடிவத்தில் செய்து கட்லெட்டாக செய்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    கேரட் கட்லெட் ரெடி.

    தக்காளி சாஸ் இதற்கு ஏற்ற காம்பினேஷன்! 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×