search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான மாதுளை எலுமிச்சை சாதம்
    X

    சத்தான சுவையான மாதுளை எலுமிச்சை சாதம்

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான, சத்தான உணவு கொடுக்க விரும்பினால் மாதுளை எலுமிச்சை சாதம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    உதிரியாக வடித்த சாதம் -  ஒரு கப், 
    மாதுளை பழம் - 1, 
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், 
    இஞ்சி - சிறிய துண்டு, 
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - சிறிதளவு,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், 
    கடுகு  - கால் டீஸ்பூன், 
    உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், 
    பெருங்காயம் - அரை டீஸ்பூன், 
    எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு.



    செய்முறை : 

    மாதுளை முத்துக்களை தனியாக உதிர்த்து வைக்கவும். 

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து வைக்கவும். 

    கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். 

    இதனுடன் மாதுளை முத்துக்கள், வடித்த சாதம், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். 

    சுவையான மாதுளை எலுமிச்சை சாதம் ரெடி! 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×