search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் - மிளகு சூப்
    X

    உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் - மிளகு சூப்

    குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால் உடல் எடையும் குறையும்.
    தேவையான பொருட்கள் : 

    முட்டைக்கோஸ் - 200 கிராம்
    கேரட் - 1
    வெங்காயம் - 2 
    சோள மாவு - 1/2 டீஸ்பூன் 
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
    உப்பு - தேவையான அளவு 
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை : 

    முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளான முட்டைக்கோஸ், கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும். 

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், குக்கரில் உள்ளவற்றை வாணலியில் ஊற்றி,
    [பாட்டி மசாலா] மிளகு தூள்
    மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

    பின் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் - மிளகு சூப் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×