search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான மாதுளை - பீட்ரூட் சூப்
    X

    குழந்தைகளுக்கு சத்தான மாதுளை - பீட்ரூட் சூப்

    குழந்தைகளுக்கு தினமும் சூப் கொடுப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று மாதுளை, பீட்ரூட் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாதுளை முத்துக்கள் - 1 கப்,
    துருவிய பீட்ரூட் - கால் கப்,
    தக்காளி - 1,
    சோள மாவு - சிறிதளவு,
    வெண்ணெய் - சிறிதளவு,
    கிராம்பு - 3,
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாதுளை முத்துக்கள், பீட்ரூட், தக்காளி ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியது கிராம்பு, சோளமாவு சேர்த்து வறுக்க வேண்டும்.

    அடுத்து அதனுடன் அரைத்த மாதுளை விழுது கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    நன்றாக கொதித்து வந்ததும் இறக்கி அதில் உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத் தூள் சேர்த்து பரிமாறலாம்.

    மாதுளை - பீட்ரூட் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×