search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பீட்ரூட் ஜூஸ்
    X

    இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பீட்ரூட் ஜூஸ்

    இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள். பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள்.

    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 2
    புதினா இலை - சிறிதளவு
    தேன் - 2 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    பால் - 1/2 கப்
    ஏலக்காய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு



    செய்முறை :

    பாலை நன்றாக காய்ச்சி ஆறியதும் குளிர வைக்கவும்.

    பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.

    அந்த தண்ணீரோடு சேர்த்து பீட்ரூட் புதினா, ஏலக்காய், இஞ்சி, உப்பு சேர்த்து பால் ஊற்றி மிக்சியில் அரைக்கவும்.

    அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    சத்தான பீட்ரூட் ஜூஸ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×