search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குதிரைவாலி காய்கறி உப்புமா செய்வது எப்படி
    X

    குதிரைவாலி காய்கறி உப்புமா செய்வது எப்படி

    சிறுதானியங்களில் குதிரைவாலி அரிசி மிகவும் நார்ச்சத்து நிறைந்தது. இன்று குதிரைவாலி அரிசி, காய்கறியை வைத்து எப்படி உப்புமா செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி - 2 கப்
    பீன்ஸ் - 10
    கேரட் - 2
    பட்டாணி - 1/2 கப்
    தக்காளி - 2
    வெங்காயம் - 2
    தண்ணீர் - 4 கப்
    நெய் - 1 மேசைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எலுமிச்சம்பழ சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையானது
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குதிரைவாலியை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து பீன்ஸ், கேரட், பட்டாணியை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதனுடன் 4 கப், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்து வைத்துள்ள குதிரைவாலியை சிறிது சிறிதாக போட்டு கிளறவும். அடுப்பை ஸிம்மில் வைத்து கிளறவும்.

    அடுத்து அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.

    வெந்து இறக்கும் போது கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான காலை டிபன் குதிரைவாலி காய்கறி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×