search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுக்கு மிளகு திப்பிலி குழம்பு
    X

    சுக்கு மிளகு திப்பிலி குழம்பு

    மழைக்காலத்தில் வரும் சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த சுக்கு மிளகு திப்பிலி குழம்பு நிவாரணம் தரும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோல் சீவிய சுக்கு - சிறிய துண்டு,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    அரிசி திப்பிலி - 4,
    புளி - நெல்லியளவு,
    சின்ன வெங்காயம் - 10,
    பூண்டு - 10 பல்,
    வத்த குழம்பு பொடி - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன்,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,

    தாளிக்க :

    மஞ்சள் தூள் - சிட்டிகை,
    நல்லெண்ணெய் - தேவைக்கு,
    உப்பு - தேவைக்கு,



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, அரிசி திப்பிலி சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    ஆறிய பின் அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    புளி பச்சை வாசனை போன பிறகு அரைத்த விழுது, வத்த குழம்பு பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு நன்கு கெட்டியான பிறகு இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×