search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான கறிவேப்பிலைக் குழம்பு
    X

    சத்தான சுவையான கறிவேப்பிலைக் குழம்பு

    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கறிவேப்பிலையை வைத்து சூப்பரான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பூண்டு - 10 பல்
    தேங்காய் - அரை முடி (துருவிக் கொள்ளவும்)
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    கடுகு - கால் டீஸ்பூன்
    உளுந்து - கால் டீஸ்பூன்
    குண்டு மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கிய பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆற விடவும்.

    நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, குண்டு மிளகாய் சேர்த்துத் தாளித்த பின்னர் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும்.

    பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு பச்சை வாசனை போனதும் இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான கறிவேப்பிலைக் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×