search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு காரத்தோசை
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு காரத்தோசை

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது கேழ்வரகு காரத்தோசை. இன்று காரத்தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகுமாவு - 1 கப்
    வறுத்து பொடித்த உளுத்தம்மாவு - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 2
    இஞ்சி - கால் தேக்கரண்டி
    கட்டித்தயிர் - 1 தேக்கரண்டி
    உப்பு - ருசிக்கேற்ப
    கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, உளுந்தம்மாவு, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கட்டித்தயிர், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து அரைமணிநேரம் அப்படியே வைத்து விடவும்.

    அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான கேழ்வரகு காரத்தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×