search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சளி, இருமலை போக்கும் புதினா இஞ்சி சூப்
    X

    சளி, இருமலை போக்கும் புதினா இஞ்சி சூப்

    சளி, இருமல், வயிற்று வலி உள்ளவர்கள் இந்த புதினா இஞ்சி சூப்பை குடிக்கலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புதினா - ஒரு கட்டு,
    கேரட் - ஒன்று,
    பீட்ரூட் - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    தக்காளி - ஒன்று,
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 5 பல்,
    கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்,
    பால் - அரை கப்,
    உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ரூட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கார்ன் ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    புதினாவுடன் கேரட், பீட்ரூட், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

    அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    இரண்டும் நன்றாக வதங்கியதும் வடிகட்டிய சாறு, பால், கார்ன் ஃப்ளார் கரைசல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    மேலே உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக பருகலாம்.

    சூப்பரான புதினா இஞ்சி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×