search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு வலுசேர்க்கும் சிவப்பு அரிசி மிளகு பொங்கல்
    X

    உடலுக்கு வலுசேர்க்கும் சிவப்பு அரிசி மிளகு பொங்கல்

    வெள்ளை அரிசியை விட சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்,
    பாசிப்பருப்பு - கால் கப்,
    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
    முந்திரி - சிறிதளவு,
    இஞ்சி - சிறிய துண்டு,
    ப.மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.

    குக்கரில் சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவிடவும்.

    வாணலியில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி தாளித்து, அரிசி - பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறினால், சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

    சூப்பரான சத்தான சிவப்பு அரிசி மிளகு பொங்கல் ரெடி.

    குறிப்பு :

    முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி சிவப்பு அரிசியை சேர்த்து கொள்வது நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×