search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை குருணை புளி உப்புமா
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை குருணை புளி உப்புமா

    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை ரவையை வைத்து புளி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை குருணை - ஒரு கப்,
    புளிச்சாறு - அரை டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று,  
    காய்ந்த மிளகாய் (சிறியது) - ஒன்று,  
    இஞ்சி  - சிறிய துண்டு,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை குருணையை சிறிதளவு எண்ணெயில் வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகைப் போட்டு வெடித்தும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

    இதனுடன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பின்னர் 3 கப் நீர், புளிச்சாறு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    அடுப்பை ’சிம்’மில் வைத்து, கோதுமை குருணையை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.

    மீதமுள்ள எண்ணெயையும் ஊற்றி உப்புமா சிறிது தளற ஆனதும், தேங்காய்த் துருவல் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கிளறவும்.

    பிறகு அடுப்பை அணைத்து, 10 நிமிடத்துக்குப் பின்னர் பரிமாறவும்.

    இதற்கு, தக்காளி சட்னி உகந்தது.

    சூப்பரான கோதுமை குருணை புளி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×