search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வெங்காய பாகற்காய் பொரியல்
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வெங்காய பாகற்காய் பொரியல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். இன்று பாகற்காய், வெங்காயம் வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - அரை கிலோ
    வெங்காயம் - அரை கிலோ
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க :

    கடுகு
    உளுந்து
    சீரகம்
    கடலைபருப்பு
    கறிவேப்பிலை
    வரவிளகாய் - 7
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாகற்காயின் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கி விட்டு நீரில் சுத்தம் செய்த உடனேயே உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. சிறிது நிமிட இடைவெளிகளில் மூடி வைத்தபடியே குலுக்கி விடவும். பாகற்காய் நன்கு சுருண்டதும் நீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.

    பாகற்காய் ஆறியதும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் பாகற்காய் சேர்த்து சுருள சுருள வதக்கவும்.

    சுவையான வெங்காய பாகற்காய் பொரியல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×