search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் சோள கார பணியாரம்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் சோள கார பணியாரம்

    காலையில் சத்தான டிபன் சாப்பிட நினைத்தால் சோள பணியாரம் செய்யலாம். இன்று இந்த பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - 1
    கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
    மிளகு - 1 ஸ்பூன்
    நல்லெண்ணை - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - விருப்பமான அளவு

    மாவு அரைக்க :

    நாட்டு சோளம் - 1 கப் (200 கிராம்)
    தோல் உளுந்து - 3 ஸ்பூன்
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    இந்துப்பு - 1 சிட்டிகை
    தண்ணீர் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகை பொடித்து கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் கடலைப்பருப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், பொடித்த மிளகு, கறிவேப்பிலை போட்டு வதக்கி அதை பணியார மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.

    பணியார கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சோள கார பணியாரம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×